பால் வியாபாரியிடம் செல்போன் பறித்தவர் கைது
மேட்டுப்பாளையம்,; மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர், 26. இவர் ராமே கவுண்டன் புதுார் சென்று, பால் வியாபாரம் செய்துவிட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, கெண்டையூர் பாலம் அருகே அவரை, வழிமறித்த மர்ம நபர் திடீரென தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். சுதாகர் கொடுக்க மறுக்கவே, கொலை செய்து விடுவதாக மிரட்டி, அவரிடம் பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார், விசாரணை மேற்கொண்டதில், பாலப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ், 50, என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், செல்போனை பறிமுதல் செய்தனர்.----