உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமியிடம் அத்துமீறல்; சிக்கியவருக்கு மொத்து

சிறுமியிடம் அத்துமீறல்; சிக்கியவருக்கு மொத்து

போத்தனூர்; கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவரின், 12 வயது மகள் இரு நாட்களுக்கு முன் வீட்டினருகே நின்றிருந்தார். ஸ்கூட்டரில் வந்த இருவரில் ஒருவர், சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமி சத்தமிடவும், அவளது சகோதரர் வந்துள்ளார். அத்துமீறலில் ஈடுபட்ட நபர், நண்பருடன் தப்பினார். இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் அவ்விருவரும், அப்பகுதிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட சிறுமி தனது தந்தையிடம் அவர்களை காண்பித்தார். அவர் இருவரையும் தனது நண்பரின் உதவியுடன் பிடிக்க முற்பட்டார். ஒருவன் தப்பிவிட, சிக்கிய மற்றொருவருக்கு 'பொதுமாத்து' கொடுத்து, சுந்தராபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை