உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுங்கு பறிக்க சென்று மரத்தில் சிக்கியவர் மீட்பு

நுங்கு பறிக்க சென்று மரத்தில் சிக்கியவர் மீட்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, நுங்கு பறிக்க பனை மரத்தில் ஏறியபோது, கருவி அறுந்ததால், தலைகீழாக தொங்கி உயிருக்கு போராடியவரை, தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் அங்குசாமி,45. இவர், கள்ளிப்பாளையம்புதுாரில் உள்ள தோட்டத்தில், நுங்கு பறிப்பதற்காக மரம் ஏறும் கருவியை கொண்டு பனை மரத்தில் ஏறினார்.அப்போது, கம்பி வளையம் அறுந்து தலைகீழாக தொங்கியபடி இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலை அலுவலர் கணபதி, சிறப்பு நிலை அலுவலர் பாஜாஜி, தீயணைப்பு வீரர்கள் இணைந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.மரத்தின் மீது நீட்டிப்பு ஏணியை வைத்து மரத்தில் தலைகீழாக தொங்கியவரை ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை