உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நிறைவு பெற்றது மண்டல பூஜை

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நிறைவு பெற்றது மண்டல பூஜை

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவடைந்தது.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், 14 ஆண்டுகளுக்குப் பின், கடந்த பிப்., 10ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, கோவிலில், 48 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜை நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.இதில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலா ஆகியோர், தீபம் ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து, 108 வலம்புரி சங்கு அபிஷேகம், 108 பசும்பால் அபிஷேகம், 108 செவ்விளநீர் அபிஷேகம், 108 கிலோ பூக்கள் மற்றும் 108 கிலோ நெய்வேத்தியத்துடன், பச்சை நாயகி உடனமர் பட்டீஸ்வரர் சுவாமிக்கு, ஏகாதச ருத்ர பாராயணத்துடன், பன்னிரு திருமுறை விண்ணப்பம் செய்து, வேத சிவாகம முறைப்படி, அபிஷேக பூஜை செய்யப்பட்டது.கோவில் கொடி மரத்தின் முன்பு, 108 ஹோம வேள்வி நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, சிறப்பு பள்ளியறை பூஜையுடன், சுவாமி வெள்ளி பல்லாக்கு பவனி வந்து, பொன்னூஞ்சலுடன், 48வது நாள் மண்டல பூஜை நிறைவு பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !