மேலும் செய்திகள்
தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை
02-Sep-2025
அன்னுார்; மதுரகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. லக்கேபாளையம் கோவில் பாளையத்தில், 300 ஆண்டுகள் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக முழுவதும் கருங்கற்களால் கருவறை வசந்த மண்டபம், மகா மண்டபம், பரிவார தெய்வங்களுக்கான சன்னதி ஆகியவை கட்டப்பட்டு கடந்த 4ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை 5ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு சிறப்பு மண்டல பூஜை நடந்தது. அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது; அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
02-Sep-2025