உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பெ.நா.பாளையத்தில் மராத்தான் போட்டி

 பெ.நா.பாளையத்தில் மராத்தான் போட்டி

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, தனியார் நிறுவனம் சார்பில், உடல் நலத்தை பேணி காக்கும் வகையில் மராத்தான் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையத்தில் உள்ள சால்சர் நிறுவனம் சார்பில், 'ஸ்டேப் அப் பார் வெல்னஸ்' என்ற தலைப்பில் மராத்தான் ஓட்டம் நடந்தது. சால்சர் நிறுவனத்தின் தலைவர் துரைசாமி கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஆர்வத்துடன் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவுக்கு, நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். உடல் நலன் முக்கியத்துவம் குறித்து கே.ஆர். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் திலகம் பேசினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை