புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மாரத்தான்
கோவை; ஜி.கே.என்.எம்.மருத்துவமனை சார்பில், இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், 'ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. கோவை, போக்கு வரத்து காவல்துறை உதவி கமிஷனர் கோபால கிருஷ்ணன், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். எல்.எம்.டபுள்யு. லட்சுமிமில்ஸ் கோ.லிமிடெட் மற்றும் லட்சுமி கார்டு கிளோத்திங் ஆகிய நிறுவனங்களும் இணைந்து நடத்தின. ஜி.கே.என்.எம். மருத்துவமனையில், புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகள் உட்பட,2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.