மாருதியின் முதல் எலக்ட்ரிக் கார் அறிமுகம்
கோவை; ராமநாதபுரம், திருச்சி ரோடு, ஜெய் கிருஷ்ணா நெக்ஸா கார் ஷோரூமில், மாருதி சுசூகி யின் முதல் எலக்ட்ரிக் காரான 'இ -- விட்டாரா' அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் டி.ஜி.எம்., ஹரிஹரன், மண்டல மேலாளர் காயத்ரி ஆகியோர் புதிய காரை அறிமுகப்படுத்தினர். இந்த புதிய எலக்ட்ரிக் கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ., வரை செல்லக்கூடிய, 61 கிலோவாட் பேட்டரி பேக், ஏழு ஏர்பேக், பத்து ஸ்பீக்கர், 10 வே பவர் அட்ஜஸ்ட்மென்ட் சீட், லெவல் 2 ஏ.டி.ஏ.எஸ்., உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.விழாவில், ஜெய் கிருஷ்ணா நெக்சாவின் நிறுவனர் துரைராஜ் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் பிரதீப் குமார், பிரவீன் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.