உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழகத்தில் மகப்பேறு உயிரிழப்பு 45ல் இருந்து 39 ஆக குறைந்தது

தமிழகத்தில் மகப்பேறு உயிரிழப்பு 45ல் இருந்து 39 ஆக குறைந்தது

சென்னை:தமிழகத்தில் மகப்பேறு கால உயிரிழப்புகள் ஆண்டுக்கு, 45ல் இருந்து, 39 ஆக குறைக்கப் பட்டு உள்ளதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பிந்தைய, 47 நாட்களுக்கு உள்ளும், பெண்களுக்கு ஏற்படும் தீவிர பாதிப்புகளுக்கு, உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை, மாநிலம் முழுதும் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. கர்ப்பிணியருக்கு தீவிர சிகிச்சையுடன், அனைத்து வசதிகளும் இருக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் குறித்த பட்டியல், அவர்களின் பிரசவ காலத்திற்கு, ஓரிரு மாதத்திற்கு முன் வழங்கப்படுகிறது.கிராமப்புற செவிலியர்கள் வாயிலாகவும், அவ்வப்போது கர்ப்பிணியர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அரசின் தொடர் நடவடிக்கையால், கர்ப்பகால உயிரிழப்புகள் குறைந்துள்ளன.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:தமிழகத்தில் ஆண்டுக்கு, 9 லட்சம் பிரசவங் கள் நடக்கின்றன. இதில், ஒரு லட்சம் பிரசவங்கள் என்ற அடிப்படையில் உயிரிழப்புகள் கணக்கிடப்படுகின்றன.கொரோனா காலத்தில், 90 ஆக இருந்த உயிரிழப்பு, அடுத்தடுத்த ஆண்டுகளில், 52 மற்றும், 45 ஆக பதிவாகி வந்தது. தற்போது, கர்ப்பிணியர் தொடர் கண்காணிப்பு மற்றும் பிரசவத்திற்கான மருத்துவமனையை முன்கூட்டியே திட்டமிடல் போன்றவற்றால், கர்ப்பகால உயிரிழப்பு, 39 ஆக குறைந்துள்ளது.உயிரிழப்புகளை தொடர்ந்து குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஆயிரம் குழந்தைகளில், எட்டு பேர் உயிரிழப்பு என்றிருந்தது, தற்போது ஏழாக குறைக்கப்பட்டுள்ளது.இதற்கு, அதிகாரிகள் மற்றும் மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வே முக்கிய காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி