உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண்ணம்பாளையத்தில் இன்று மருத்துவ முகாம்

கண்ணம்பாளையத்தில் இன்று மருத்துவ முகாம்

சூலூர்; சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் இன்று காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கிறது. முகாமில், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், எலும்பு மூட்டு சிகிச்சை, கர்ப்பிணிகள் மற்றும் மகளிருக்கான மருத்துவம், மனநலம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மருத்துவம், தோல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவம், புற்று நோய், காச நோய் உள்ளிட்டவைகளுக்கான மருத்துவ குழுவினர், பொதுமக்களை பரிசோதித்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மருந்துகள் வழங்கப்படும். இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே இலவசமாக எடுக்கப்படும். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எடுத்து வர வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, அமைப்பு சார தொழிலாளர்கள் நல வாரிய அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை