பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு டிரஸ்ட் சார்பில் மருத்துவ சேவை
பொள்ளாச்சி ; பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, மருத்துவ சேவை வழங்கும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடந்தது.பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் சேவா டிரஸ்ட், ஆச்சிப்பட்டி ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவில் டிரஸ்ட், தமிழ்நாடு ஐயப்பா மெடிக்கல் மிஷன் மற்றும் சேரிடீஸ், சவுடேஸ்வரி இளைஞர் நலச்சங்கம், பொள்ளாச்சி நலம் ேஹாமியோ மெடிக்கல்ஸ் சார்பில், பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ சேவை முகாம், ஆச்சிப்பட்டியில் நடந்தது. ஆச்சிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே, பழநி பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவியை தன்னார்வலர்கள் குழுவாக இணைந்து செய்தனர்.தன்னார்வ அமைப்பினர் கூறுகையில்,'பழநிக்கு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொள்ளாச்சி வழியாக பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.அவர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து கால்களுக்கு, மசாஜ் செய்து தேவையான மருத்துவ சேவைகளை செய்து வருகிறோம்.கால் வலிக்கு தேவையான ஆயில் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், தேவைப்படுவோருக்கு மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. சுக்கு டீ, மூலிகை தண்ணீர் வழங்கப்பட்டது.பாதயாத்திரை செல்வோருக்கு, ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஓட்டி அனுப்பப்படுகிறது,' என்றனர்.