உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லூரியில் மருத்துவக் குழு ஆய்வு

கல்லூரியில் மருத்துவக் குழு ஆய்வு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள மகாராஜா ஹெல்த் இன்ஸ்டிட்யூட்டில் நேற்று மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள மகாராஜா ஹெல்த் இன்ஸ்டிட்யூட்டில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல பிரிவுகளில் படிக்கின்றனர். கல்லூரி முறையான அங்கீகாரம் பெற்றதா, இல்லையா என சந்தேகம் எழுந்ததால், மாணவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 'சன் ரைஸ் பல்கலை'க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதில், தமிழகத்தில் சன் ரைஸ் பல்கலைகழக கிளைகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாணவர்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரியின் அங்கீகாரம் குறித்து புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தலைமையிலான குழுவினர் நேற்று கல்லுாரியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சன் ரைஸ் பல்கலையில் மாணவர்கள் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி