உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியின மக்களுக்கு உதவ மருத்துவ வாகனங்கள் வந்தாச்சு

பழங்குடியின மக்களுக்கு உதவ மருத்துவ வாகனங்கள் வந்தாச்சு

கோவை; தமிழக அளவில், பொது சுகாதாரத்துறைக்கு 4 கோடி ரூபாயில், 20 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. கோவையில், ஆனைமலை, காரமடை பகுதிகளுக்கு பயன்படுத்த இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் அடிப்படை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து அவ்வாகனங்கள் கோவைக்கு எடுத்து வரப்பட்டு, மண்டல பணிமனையில் ஆய்வு செய்யப்பட்டது. பழங்குடியின பகுதிகளுக்கு இவ்வாகனங்கள் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பழங்குடியின மக்கள் வாழும் மலைப்பகுதியில், மருத்துவ வசதிகள் பெரிதளவில் இல்லாத சூழலில், இவ்வாகனங்கள் கர்ப்பிணிகளுக்கு அடிப்படை தொடர் பரிசோதனை, பிற சுகாதார பரிசோதனைகளை, நடமாடும் வாகன மருத்துவ குழு மேற்கொள்கிறது. பழங்குடியின மக்கள் மத்தியில் மரபணு சார்ந்த குறைபாடுகள் அதிகம் காணப்படுகின்றன. இக்குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மரபணு வல்லுனர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை