வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவை ராமேஸ்வரம் ரயிலை அணைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை எடுங்கள்.. கோவை போத்தனுர் - இருகூர் - சிங்காநல்லூர்- பீளமேடு - வடகோயம்புத்தூர் - கோயம்புத்தூர்- போத்தனுர் லோக்கல் ரயில் சேவையை அறிமுகம் செய்யுங்கள்
கோவை; மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையேயான சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் --- திரு நெல்வேலி சிறப்பு ரயில், திருநெல்வேலி -- மேட்டுப்பாளையம் இடையே, வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சிறப்பு ரயில், ஞாயிறு இரவு, 7:00 மணிக்கு திருநெல்வேலியில்(06030) இருந்து புறப்பட்டு மறுநாள் காலை, 7:30 மணிக்கு, மேட்டுப்பாளையம் வந்தடையும்.அதேபோல், திங்கள் இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில்(06029) இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு, திருநெல்வேலி சென்றடையும்.சிறப்பு ரயிலில் ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். சிறப்பு ரயில் சேரன்மாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார், கோவை ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.கோவையிலிருந்து மதுரை, பழனி, தென்காசி, குற்றாலம், ஸ்ரீவில்லிபுத்துார், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டு, சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோருக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.இந்த ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், பெரும்பாலும் தீர்ந்து விடுகின்றன. இந்த சிறப்பு ரயில் கடந்த, ஏப்., 2022 முதல் தற்போது வரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அதன் காரணமாகவே இந்த ரயில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்த முறையும் ரயிலை நீட்டிப்பதுடன், நிரந்தரமாக்கவும் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை ராமேஸ்வரம் ரயிலை அணைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை எடுங்கள்.. கோவை போத்தனுர் - இருகூர் - சிங்காநல்லூர்- பீளமேடு - வடகோயம்புத்தூர் - கோயம்புத்தூர்- போத்தனுர் லோக்கல் ரயில் சேவையை அறிமுகம் செய்யுங்கள்