உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கு மிட்டவுன் மஹா குரு விருது

சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கு மிட்டவுன் மஹா குரு விருது

கோவை; கோவை தேவாங்க மேல்நிலைப்பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்துார் மிட்டவுன் சார்பில், கல்வி பணியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, 'மிட்டவுன் மஹாகுரு விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில், வேலுசாமி, தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காரமடை; மோகனசுந்தரம், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிறுமுகை; பிரேமா, தலைமையாசிரியர், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி, மனார்; அருணா சுமதி, தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாயக்கன்பாளையம்; வனஜா, ஆசிரியர், ஊரா ட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாயக்கன்பாளையம்; இளம்பரிதி, முதுகலை உதவியாளர், தேவாங்க மேல்நிலைப்பள்ளி; சண்முகம், இளங்கலை உதவியாளர், தேவாங்க மேல்நிலைப்பள்ளி ஆகியோர் விருது பெற்றனர். தேவாங்க மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, என்.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் கல்வி இயக்குனர் முத்துசாமி பேசுகையில், “ஆசிரியர்களால் ஒருவர் சமூகத்தில் சிறந்த மனிதனாக உருவாக முடியும். நானும் அப்படியே உருவாக்கப்பட்டேன். ஒழுக்கம், கண்ணியம் உள்ளிட்ட தலைசிறந்த பண்புகளை ஆசிரியர்களிடம் கற்றுக்கொள்கிறோம். அவர்கள் இன்றி எதுவும் இல்லை,'' என்றார். வொக்கேஷனல் சர்வீஸ் மாவட்ட தலைவர் கணேஷ்குமார், வொக்கேஷனல் அவார்ட்ஸ் மாவட்ட தலைவர் சசிகுமார், தேவாங்க மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஹேமமாலினி, ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்துார் மிட்டவுன் தலைவர் ஹரி பாஸ்கர், செயலாளர் ரஜித் கோபிநாத், வொக்கேஷனல் சர்வீஸ் தலைவர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி