மினியேச்சர் ஆன கிச்சன் பொருட்கள்
ஒரு காலத்தில் வீட்டின் சமையலறையில் தவறாமல் இடம் பிடித்திருந்தவை அம்மிக்கல், ஆட்டுக்கல், திரிகை போன்ற கல் பொருட்கள். மிளகாய் அரைப்பது முதல் மாவு தயாரிப்பது வரை, அன்றாட சமையலில் இவற்றின் பயன்பாடு அதிகம். மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட நவீன சாதனங்கள் வந்த பிறகு, இவற்றின் பயன்பாடு குறைந்தது. இப்போது அவற்றின் மினியேச்சர் வடிவங்கள் புதிய இடத்தை பிடித்துள்ளன. அம்மிக்கல், ஆட்டுக்கல், திரிகை உள்ளிட்ட பாரம்பரிய கல் பொருட்கள் சின்னஞ்சிறு வடிவங்களாக தயாரிக்கப்பட்டு, வீட்டு அலங்காரப் பொருட்களாகவும், நினைவுப் பொருட்களாகவும் மாறிவிட்டன. வீட்டை அலங்கரிக்க விரும்புபவர்கள் மட்டுமின்றி, பாரம்பரியத்தை விரும்புபவர்களும் இவற்றை வாங்குவது குறிப்பிடத்தக்கது.