அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில், அமைச்சர் சுப்ரமணியன் திடீரென ஆய்வு செய்தார். பொள்ளாச்சி அருகே, வேட்டைக்காரன்புதுாரில் அரசு மருத்துவமனையில், வேட்டைக்காரன்புதுார், சேத்துமடை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மக்கள், பழங்குடியின மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் திடீரென மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். உள்நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் உள்ள வசதிகள், துாய்மை குறித்து ஆய்வு செய்தார்.