உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எச்சரிக்கை அறிவிப்பு பலகை மிஸ்சிங்; விபத்தில் சிக்கும் வாகனங்கள்

எச்சரிக்கை அறிவிப்பு பலகை மிஸ்சிங்; விபத்தில் சிக்கும் வாகனங்கள்

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி - உடுமலை மார்க்கமாக நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் நிலையில், தேவையான இடங்களில் வாகன ஓட்டுநர்களை அலர்ட் செய்ய எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி --- திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக, 3,649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொள்ளாச்சி --- மடத்துக்குளம், 50. 07 கி.மீ.,; மடத்துக்குளம் ---- ஒட்டன்சத்திரம், 45.38 கி.மீ.,; ஒட்டன்சத்திரம் --- கமலாபுரம், 36.51 கி.மீ., என, மொத்தம், 131.96 கி.மீ., துாரத்துக்கு புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.அதில், 80 சதவீதம் புறவழிச்சாலையாக அமைக்கப்படும் நிலையில், பெருமளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.ஆனால், வாகன போக்குவரத்து நிறைந்த வழித்தடத்தில், வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில், போதியளவிலான ஒளியை பிரதிபலிக்கும் ரிப்ளக்டர் அமைக்கப்படாமல் உள்ளது.குறிப்பாக, முக்கிய சாலை சந்திப்புகள், வளைவுகள், கிராமங்களைக் கடந்து செல்லும் பகுதிகளில், வாகன ஓட்டுனர்களை எச்சரிக்கும் விதத்தில், ஒளியை பிரதிபலிக்கும் 'ரிப்ளக்டர்'கள் காணப்படுவதில்லை.இதனால், அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள், நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:திப்பம்பட்டியில் இருந்து, உடுமலை நோக்கிய வழித்தடத்தில், நல்லாம்பள்ளி அருகே நான்குவழிச்சாலை சந்திப்பு உள்ளது. இங்கு, உடுமலையில் இருந்து வரும் வாகனங்கள், வலதுபுறம் திரும்பாமல் இருக்க சாலையின் நடுவே மண் கொட்டப்பட்டது.ஆனால், போதிய எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. இதனால், இரவில், அவ்வழியே வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இரவில், முகப்பு விளக்கு வெளிச்சத்தை பிரதிபலித்து தெரியப்படுத்த, முக்கிய சாலை சந்திப்புகளில் 'ரிப்ளக்டர்' அமைக்க வேண்டும்.அதேபோல, புதிதாக ரோடு அமைக்கும் பகுதிகளில், அதற்கான அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை 'ரிப்ளக்டர்' போதிய அளவில் இருத்தல் வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை