மேலும் செய்திகள்
எம்.எல்.ஏ., அலுவலகம் தற்காலிக இடமாற்றம்
26-Sep-2024
வால்பாறை : வால்பாறையில், எம்.எல்.ஏ., அலுவலகம் இல்லாததால், குறைகளை தெரிவிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில், கடந்த, 18 ஆண்டுகளுக்கு முன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, வளையல் கடை வீதி அருகே எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டது.அதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்களாக இருந்த கோவை தங்கம், ஆறுமுகம் ஆகியோர், அலுவலகத்தை பயன்படுத்தி, மக்கள் குறைகளை கேட்டறிந்தனர். இதனால், மக்களும் தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவித்து வந்தனர்.அதன்பின், எம்.எல்.ஏ.,வாக இருந்த கஸ்துாரி, 'சிட்டிங்' எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி ஆகியோர் ஒரு நாள் கூட அலுவலகத்தை திறந்து மக்கள் குறைகளை கேட்கவில்லை. இதனால் வால்பாறை மலைப்பகுதி மக்கள், அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,வை சந்திக்க முடியாமல் தவிக்கின்றனர்.இதனிடையே, பாழடைந்து காட்சியளிக்கும் எம்.எல்.ஏ., அலுவலகம் கடந்த சில ஆண்டுகளாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.வால்பாறை மக்கள் கூறியதாவது:வால்பாறை நகரில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., வாடகை கட்டடத்தில் அலுவலகம் திறந்து, மக்கள் குறை கேட்டு வருகிறார்.இருப்பினும், கட்சி சார்ந்த அலுவலகமாக உள்ளதால், பொதுமக்கள் எம்.எல்.ஏ., அலுவலகம் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, எம்.எல்.ஏ., எப்ப வருவார் என்பது யாருக்கும் தெரிவதில்லை. எனவே வால்பாறை நகரில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, புதிய எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டி, மக்கள் குறைகளை கேட்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
26-Sep-2024