உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லுாரியில் புதிய தொழில்நுட்பத்தில் நவீன இயந்திரம்

ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லுாரியில் புதிய தொழில்நுட்பத்தில் நவீன இயந்திரம்

கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா டென்டல் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் டென்டே சிம்டோகேர் அதிநவீன சிமுலேட்டர் அறை துவக்கப்பட்டுள்ளது.சிமுலேட்டர் அறையில் வி.ஆர்., தொழில்நுட்பம், ஏ.ஆர்., தொழில்நுட்பம், ஆகுமென்டட் ரியாலிட்டி மற்றும் ஹாப்டிக் டெக்னாலஜி ஒருங்கிணைந்து டென்டே சிம்டோகேர் அமைப்பு செயல்படுகிறது. இதன் வாயிலாக, பல் மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்களின் கற்றல் அனுபவம் ஆழமாகவும், மிக தெளிவாகவும் இருக்கும். பல்வேறு ஆராய்ச்சி தரவுகள் அறிந்துகொள்ளவும், நேரடியான கற்றல் அனுபவம் உணரும் வகையிலும் இதன் தொழில்நுட்பம் நவீனத்தன்மை பெற்றுள்ளது.புதிய நவீன அமைப்பு பயன்பாட்டை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் துவக்கி வைத்தனர். துவக்கவிழாவில், அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தீபானந்தன், மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால்,, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ