உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

ரோட்டில் கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தேவம்பாடிவலசுவை சேர்ந்த சந்தோஷ்குமார்,25, தனியார் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் வேலைக்கு செல்லும் போது, ரோட்டில் கிடந்த பார்சலில், 2.5 லட்சம் ரூபாய் பணம் கிடந்ததாக கொண்டு வந்து மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்தார். மேற்கு போலீசார் விசாரணை செய்ததில், காளிபாளையத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரி ஈஸ்வரமூர்த்தியின் பணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார், சந்தோஷ்குமாரை அழைத்து, அவர் வாயிலாக ஈஸ்வரமூர்த்தியிடம் பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை எடுத்து கொடுத்த இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை