உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுலா பயணியரை எதிர்நோக்கும் குரங்குகள்

சுற்றுலா பயணியரை எதிர்நோக்கும் குரங்குகள்

பொள்ளாச்சி; இயற்கை உணவை மறந்து, சுற்றுலா பயணியரிடம் இருந்து ஏதேனும் கிடைக்காதா என்ற ஏக்கத்தில், குரங்குகள் வலம் வருகின்றன.பொள்ளாச்சி அருகே ஆழியாறு, கவியருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுத்தலங்களாக உள்ளன. இங்கு, சுற்றுலா பயணியர், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகம் வருகின்றனர்.அங்குள்ள வனத்தில், மான், யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளையும் கண்டு ரசிக்கின்றனர். பாதுகாப்பு கருதி, 'வனத்திற்குள் அத்துமீறி நுழையக்கூடாது, மது அருந்தக் கூடாது, வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யாதீர்,' என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.இருப்பினும், சுற்றுலா பயணியர், குரங்குகளை கண்ட 'குஷி'யில், அவற்றின் சுட்டித்தனத்தை ரசித்தவாறு, தாங்கள் உட்கொள்ளும் உணவு பொருட்களை அவற்றுக்கு பகிர்ந்து அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இதனால், அங்கு திரியும் குரங்குகள், இயற்கையாக கிடைக்கும் உணவுகளை தேடாமல், பசியை போக்க சுற்றுலா பயணியரை எதிர்பார்த்து ரோட்டோரத்தில் காத்துக்கிடக்கின்றன.வனத்துறையினர் கூறுகையில், 'உணவை சாப்பிட்டு 'ருசி' பார்த்த குரங்குகள், உணவு தராவிட்டால், சுட்டித்தனம் காட்டுகின்றன.சிலர், பாலித்தீன் பைகளோடு எடுத்து வரும் தின்பண்டங்களை அப்படியே குரங்குகளுக்கு அளிக்க முற்படுகின்றனர். பாலித்தீன் பைகளை விழுங்கும் குரங்கள் உயிரிழக்க நேரிடும். சுற்றுலா பயணியர் குரங்களுக்கு உணவு அளிப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை