உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூலத்துறை அரசு பள்ளி சாதனை

மூலத்துறை அரசு பள்ளி சாதனை

மேட்டுப்பாளையம்; காரமடை வட்டார அ ளவி லான அரசு பள்ளி மாணவர்களுக்கான இலக்கிய மன்ற போட்டிகளும், சிறார் திரைப்பட மன்ற போட்டிகளும், காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தன. இதில் சிறுமுகை மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 16 வகை ஒன்றிய அளவிலான இலக்கிய மன்றப் போட்டிகளில் பங்கேற்றனர். தமிழ் பேச்சு போட்டியில் கனிஷ்கர், சுதர்சன் ஆகிய இருவரும் முதலிடத்தையும், தமிழ் கதை சொல்லும் போட்டியில் பிரணவ், ஸ்ரீதேவி ஆகியோர் முதலிடத்தையும், தமிழ் கட்டுரை போட்டியில் நேத்ரா முதலிடத்தையும், தமிழ் கவிதை எழுதும் போட்டியில் பிரதீப் முதலிடத்தையும் பெற்றனர். ஆங்கில பேச்சு மற்றும் கதை சொல்லும் போட்டிகளில் கார்நிஷ், அனாஹித்தா ஆகியோர் முதலிடத்தையும், ஆங்கிலம் கட்டுரைப் போட்டியில் பிரதிக்ஷா, ஹரியாசினி ஆகியோர் முதலிடத்தையும், ஆங்கிலம் கவிதை எழுதுதல் போட்டியில் அர்ஷத் முதலிடத்தையும், சாய் சர்வேஷ் இரண்டாமிடத்தையும் பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியை பத்திரம்மாள், நல்லாசிரியர் திருமுருகன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !