உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

போத்தனூர் : கோவை, சுகுணாபுரத்திலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், மத்திய அரசின் மின்னணுலியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நெட் ஒர்க் (எர்நெட்) நிறுவனத்துடனான, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, கிருஷ்ணா கல்வி குழும அறங்காவலர் ஆதித்யா தலைமையில் நடந்தது.எர்நெட் நிறுவன முதுநிலை மேலாண்மை இயக்குனர் பாவேந்தன் பேசுகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அனைத்து நிறுவனத்திலும் காலத்தின் தேவை. ஆசிரியர்கள், மாணவர்கள் இத்துறையில் ஆராய்ச்சி செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட மாணவர்கள் தயாராக வேண்டும், என்றார்.தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அறங்காவலர் ஆதித்யாவுடன் பரிமாற்றம் செய்து கொண்டார்.கல்லூரி முதல்வர் பொற்குமரன், கல்வி குழும கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ