மேலும் செய்திகள்
மலைப்பாதையில் சிறுத்தை உலா
05-Nov-2024
வால்பாறை ; வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகள் நடமாடுவதால், சுற்றுலாபயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில் வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் சிங்கவால்குரங்குகள், வரையாடு, காட்டுமாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் நேரத்திலேயே ரோட்டில் முகாமிடுகின்றன.மலைப்பாதையில் அதிவேகமாக வரும் வாகனங்களால், சில நேரங்களில் வனவிலங்குகள் வாகனத்தில் சிக்கி உயிர்பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆழியாறிலிருந்து வால்பாறை வரும் மலைப்பாதையில், உலகின் அரிய வகை வனவிலங்குகளான, வரையாடுகள், சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக வால்பாறை வரும் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுக்கு இடையே வரையாடுகள் அதிக அளவில் நடமாடுகின்றன.எனவே, இப்பாதையில் சுற்றுலாபயணியர் தங்களது வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தவோ,வரையாடுகளை படம் பிடிக்கவோ, அச்சுறுத்தவோ கூடாது.மிறினால் வன உயிரினபாதுகாப்பு சட்டப்படி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.
05-Nov-2024