கூடுதல் வகுப்பறை கட்ட எம்.பி.,யிடம் வலியுறுத்தல்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 71 மாணவர்கள் படிக்கின்றனர். மொத்தம், ஐந்து வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர வேண்டுமென, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமியிடம், பள்ளி தலைமையாசிரியர் கணேசன் மனு கொடுத்து வலியுறுத்தினார்.மனுவில் கூறியிருப்பதாவது:தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளியில், தமிழக முதல்வர் அறிவிப்பின்படி, 'ைஹடெக் லேப்' மற்றும் 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்பட உள்ளது. அதற்கேற்ப கட்டட வசதியில்லை. மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும். காலை உணவு திட்டத்துக்காக தனி சமையலறை கட்டித்தர வேண்டும்.தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள குப்பைக்குழியில் அசுத்த நீரும், புதர்செடிகளும் உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது; விஷ பூச்சிகளும் உள்ளன. இந்த குழியை மூடி, மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானம், கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவை பெற்ற எம்.பி., பள்ளியை நேரடியாக ஆய்வு செய்து, கூடுதல் வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக தலைமையாசிரியர் தெரிவித்தார்.