மேலும் செய்திகள்
படகு சவாரி தற்காலிக நிறுத்தம்
12-Dec-2024
வால்பாறை : வால்பாறையில், கழிவு நீர் தேங்கிய படகு இல்லம், 'தினமலர்' செய்தி எதிரொலியாக, சுத்தம் செய்யப்பட்டது.வால்பாறையில், சுற்றுலா பயணியரை மகிழ்விக்க நகராட்சி சார்பில் படகுஇல்லம் துவங்கப்பட்டுள்ளது. படகு சவாரியில் சுற்றுலா பயணியர் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக, 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், படகுஇல்லத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் கழிவு நீர், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை போன்றவை சங்கமிக்கின்றன. இதனால், கழிவு நீர் துர்நாற்றத்துடன் சுற்றுலா பயணியர் படகு சவாரி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், படகுஇல்லத்தில் தேங்கி நிற்கும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில், படகுஇல்லத்தில் தேங்கியிருந்த குப்பை உள்ளிட்ட கழிவுகளை துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.படகு இல்லத்தில் கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க, நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. 'தினமலர்' செய்தியால் படகு இல்லம் சுத்தம் செய்யப்பட்டதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்தனர்.
12-Dec-2024