உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

கோவை; கோவை மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், துாய்மைப்பணிகள், சாலைப்பணிகள், கட்டுமானப் பணிகள், 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.மத்திய மண்டலம், 70வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.உதவி நகர்நல அலுவலர் பூபதி, உதவி கமிஷனர் செந்தில்குமரன். உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, கவுன்சிலர் சர்மிளா, சுகாதார ஆய்வாளர்கள் தனபாலன், சரவணக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ