உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை அனைத்து ஜமாத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில், வக்ப் சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காரமடை பள்ளிவாசல் வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 'வக்ப் சொத்து, இறைவனின் சொத்து, வக்ப் சொத்து ஏழையின் சொத்து. ஏற்க மாட்டோம், ஏற்க மாட்டோம், வக்ப் சட்ட திருத்தத்தை நிராகரிப்போம்' என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் ஏராளமான இஸ்லாமியர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை