உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒற்றை யானையை விரட்ட வந்து விட்டான் நரசிம்மன்

ஒற்றை யானையை விரட்ட வந்து விட்டான் நரசிம்மன்

தொண்டாமுத்தூர்; தினமலர் செய்தி எதிரொலியால், பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பொருட்களை சேதப்படுத்தியும், பக்தர்களை துரத்தியும் வந்த ஒற்றைக்காட்டு யானையை விரட்ட, வனத்துறையினர் கும்கி யானையை கொண்டுவந்துள்ளனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, தென் கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இம்மலைத்தொடரின், அடிவாரத்தில் உள்ள பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.அடர் வனப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதால், இங்கு வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாகவே, இப்பகுதியில், ஒற்றைக்காட்டு யானை சுற்றி வருகிறது.அவ்வப்போது, ஒற்றைக் காட்டு யானை, உணவு தேடி, கோவில் சமையலறை மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை சேதப்படுத்தி வருகிறது. கடந்த, வாரம், இரவில், உணவு தேடி வந்தபோது, அங்கிருந்த பக்தர்களை துரத்தியது.இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்றுமுன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், ஒற்றைக்காட்டு யானையை விரட்டவும், வனத்துறையினர் கும்கி யானையை கொண்டு வந்துள்ளனர்.இதுகுறித்து, வனத்துறையினர் கூறியதாவது:வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதில், மீதமாகும் உணவுக்கழிவுகளை முறையாக அகற்றாமல், குழியில் கொட்டுவதால், அந்த உணவின் வாசத்தால், ஒற்றை யானை வருகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக, பக்தர்களையும் விரட்டுகிறது.இதனால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, ஒற்றை காட்டு யானையை, கோவிலில் இருந்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து, 'நரசிம்மன்' என்ற கும்கி யானை கொண்டு வரப்பட்டுள்ளது.பூண்டியில் உள்ள வனத்துறை முகாமில், தற்போது கும்கி யானை உள்ளது. ஒற்றைக்காட்டு யானை வந்தால், கும்கி மூலம் விரட்டப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை