உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாராயணகுரு கல்லுாரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

நாராயணகுரு கல்லுாரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

கோவை: பாலக்காடு ரோடு, க.க.சாவடியில் செயல்படும் ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி, 1994ம் ஆண்டு தொடங்கப்பட்டு கல்விச் சேவையில் 30 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து தன்னாட்சி அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 10 ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஸ்ரீ நாராயணகுரு கல்லூரி தரமான கல்வியை வழங்கி வரும் நிறுவனத்திற்கு இது ஒரு சிறந்த சாதனை என, ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் மாணவர்கள் அனைவரும் தன்னாட்சி உரிமை பெற்றதை கொண்டாடி மகிழ்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை