உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய அளவிலான குதிரையேற்ற லீக்; கோவையில் நாளை போட்டி துவக்கம்

தேசிய அளவிலான குதிரையேற்ற லீக்; கோவையில் நாளை போட்டி துவக்கம்

கோவை; தேசிய அளவிலான குதிரையேற்ற 'லீக்' போட்டி, கோவையில் நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.அவிநாசி ரோட்டில் உள்ள அலெக்சாண்டர் குதிரையேற்ற கிளப்பில், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இண்டிஜூனஸ் ஹார்ஸ் சொசைட்டி மாநில தலைவர் சக்தி பாலாஜி கூறியதாவது:இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி(தமிழ்நாடு) சார்பில், 'இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்' குதிரையேற்ற போட்டி வரும், 4 முதல், 6ம் தேதி வரை நடக்கிறது. வெள்ளானைப்பட்டியை அடுத்த மூலப்பாளையத்தில், 'பிசைட் தி இக்வெஸ்ட்ரியன் கிரஸ்ட்' மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், ஆறு மாநில அணிகள் பங்கேற்கின்றன.சென்னை புல்ஸ்(தமிழ்நாடு), பெகாசஸ் ஸ்போர்ட்ஸ்(கேரளம்), பெங்களூரு நைட்ஸ்(கர்நாடகா), கோல்கொண்டா சார்ஜர்ஸ்(தெலுங்கானா), குவாண்டம் ரெய்ன்ஸ்(கோவா), எலீட் இக்வெஸ்ட்ரியன்ஸ்(மேற்கு வங்கம்) ஆகிய அணிகளில், திறமையான குதிரையேற்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.பார்வையாளர்கள், 2,000 பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அணிக்கு ஆறு பேர் வீதம் ஆறு அணிகளில், 36 வீரர்கள் பங்கேற்கின்றனர். கோவையில் முதல் முறையாக நடக்கும் போட்டிகளை காண்பதற்கான இலவச டிக்கெட்களை, ticketprix.comஎன்ற இணையதளத்தில் பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ