உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய நுாலக வார விழா; மாணவர்கள் விழிப்புணர்வு

தேசிய நுாலக வார விழா; மாணவர்கள் விழிப்புணர்வு

ஆனைமலை ; ஆனைமலையில் வாசிப்பின் அவசியம் குறித்து மக்களிடையே, அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆனைமலை கிளை நுாலகம் வாயிலாக, தேசிய நுாலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், ஆனைமலையில், நுாலகத்தின் பயன்பாட்டை வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஆனைமலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.வாசகர் வட்டத் தலைவர் ராம்குமார், தலைமை வகித்தார். முன்னதாக, நுாலகர் மீனாகுமாரி, அனைவரையும் வரவேற்றார். முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி பங்கேற்றார்.தொடர்ந்து, 'அறிவைத் தேடி நுாலகம் செல்வோம்', 'படிப்போம், படைப்போம், பதிப்போம்' என்று முழுக்கமிட்டு, பொதுமக்கள் மத்தியில் வாசிப்பின் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரூராட்சி துணைத் தலைவர் ஜாபர்அலி, கவுன்சிலர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வாசகர் மாணிக்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ