உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய கைப்பந்து போட்டி; அரசு பள்ளி மாணவர் தேர்வு 

தேசிய கைப்பந்து போட்டி; அரசு பள்ளி மாணவர் தேர்வு 

ஆனைமலை; கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர், தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும், தேசிய அளவிலான ேஹண்ட்பால் போட்டி, வரும், டிச., 11 முதல், 17ம் தேதி வரை, பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் நடைபெற உள்ளது. அதில், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தமிழக அளவில் பங்கேற்க கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் மாதேஷ் தேர்வாகியுள்ளார். மாணவரை, பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ