உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

 இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே பன்னீர்மடையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக பெரியநாயக்கன்பாளையம் சமூக காடுகள் சரகம் சார்பில், வனம் மற்றும் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பாக, மாணவர்களுக்கு, வனங்களின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், வன உயிரினங்கள் பாதுகாப்பு, மனித விலங்கு முரண்பாடு குறைப்பு, காலநிலை மாற்றம், காட்டுத்தீ, வனப்பகுதி சாலையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை ஆகிய தலைப்புகளில் களப்பயிற்சி மற்றும் நேரடி விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், கோடை மற்றும் இயற்கை கல்வி முகாம்கள் வாயிலாக, மாணவர்களுக்கு இயற்கை பற்றிய புரிதல் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை