பன்முக திறனை மேம்படுத்தும் நவபாரத் இன்டர்நேஷனல் பள்ளி
கோ வை சத்தி ரோட்டில் அன்னுார், சத்தி மற்றும் சோமனுாரில் நவபாரத் இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அடிப்படையில் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒழுக்கம், தனித்திறன், ஆளுமைத்திறன் மேம்பாட்டுக்கு தனிக்கவனம் செலுத்துகிறோம். நவீன தொழில்நுட்ப கணினி சார் கற்பித்தல் உபகரணங்கள், 'ஏ.சி.,' வசதியுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன. உயர் கல்வியில் சேர ஜே.இ.இ, ----நீட்- சி.யு.இ.டி- சி.ஏ.- சி.எம்.ஏ. - கிளாட் - யூசிடி உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் மட்டுமின்றி, பல்வேறு போட்டித்தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறோம். வி ளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, மினி ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் இங்குள்ளது. இத்துடன், ஸ்கேட்டிங், கூடைப்பந்து, வாலிபால், சிலம்பம், செஸ், இசை, கீபோர்டு, பேஸ்கட்பால், டிரம்ஸ் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ஏ.ஐ.ரோபோடிக்ஸ் மற்றும் அபாகஸ், கம்யூனிகேஷன் ஆங்கில பயிற்சிகளும் பாடத்திட்டத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து அதிக தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகிறோம். தென் மாநில அளவிலான நீச்சல் போட்டி எங்கள் பள்ளியில் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஓவரால் ரன்னர் என்ற இடத்தை எங்கள் பள்ளி தக்க வைத்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.