உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்.சி.சி. மாணவர்களால் ரயில் நிலையம் பளிச்

என்.சி.சி. மாணவர்களால் ரயில் நிலையம் பளிச்

பெ.நா.பாளையம்; துாய்மை இந்தியா திட்டத்தில் என்.சி.சி., மாணவர்கள் பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி, பிரஸ் காலனி தம்பு மேல்நிலைப்பள்ளி, ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் மகாஜனா மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள், 100 பேர் பங்கேற்றனர்.இந்நிகழ்வில், சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, தம்பு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், இயக்குனர் குணசேகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தின் முன்புறமுள்ள புதர்கள் அகற்றப்பட்டன. ரயில் நிலைய நடை மேடையின் மீது இருந்த முள் செடிகள், புதர்கள் அகற்றப்பட்டன. ரயில்வே நிலைய வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு, 'நம் இந்தியாவை நாம் துாய்மையாக வைத்துக் கொள்வோம்' என்ற வார்த்தைகள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில், டி.என்., சி.டி.சி., என்.சி.சி., பிரிவை சேர்ந்த ஜெ.சி.ஒ., முகேஷ், குமார், முருகன், சிங் ஜெய்சங்கர் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர். என்.சி.சி., அலுவலர்கள் கார்த்திகேயன், குணசேகரன், சின்னப்பராஜ், தேவராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி