உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேகத்தை கண்காணிக்கும் கேமரா அவசியம்

வேகத்தை கண்காணிக்கும் கேமரா அவசியம்

சூலுார்: 'விமானப்படைத் தளம் முதல் சூலுார் வரை வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் காமிராக்களை பொருத்த வேண்டும்' என, கிராம சபை கூட்டத்தில் மக்கள் மனு அளித்தனர். சூலுார் - திருச்சி ரோட்டில் காங்கயம்பாளையம் ஊராட்சி உள்ளது. திருச்சி ரோட்டின் தென் பகுதியில், விமானப் படைத்தளமும், வடக்கு பகுதியில் அதிகாரிகள், வீரர்கள் குடியிருப்பும் உள்ளது. இப்பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து அதிகம் இருக்கும். விமானப்படைத் தளம் முதல் சூலுார் போலீஸ் ஸ்டேஷன் வரை தினமும் ஏதாவது ஒரு இடத்தில் விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது, இரு சக்கர வாகன ஓட்டிகள் தான். கனரக வாகனங்கள் மற்றும் கார்களின் அதிவேகம் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு, இரு சக்கர வாகன ஓட்டிகள் காயமடைவதாக புகார்கள் உள்ளன. இந்நிலையில், காங்கயம்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், இப்பிரச்னை தொடர்பாக மக்கள் மனு அளித்தனர். அதில், வாகனங்களின் வேகத்தை கண்காணித்து, அபராதம் விதிக்கும் வகையில், விமானப்படைத் தளம் முதல் சூலுார் போலீஸ் ஸ்டேஷன் வரை, வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி