கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு தேவை
கோவை: அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சுத்திகரிக்கப்படாமல் ஓடைகள், குளங்களில் கலக்கிறது. நீர்நிலைகள் மாசடைவதுடன், நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட நீரைக் குட்டைகளில் தேக்கி; இந்த நீரை விவசாயம், கட்டுமானப் பணிகளுக்கு மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.