உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேரு மகா வித்யாலயா துாய்மை திருவிழா

நேரு மகா வித்யாலயா துாய்மை திருவிழா

கோவை; ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை அறிவியல் கல்லுாரியில், மகாத்மா காந்தி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக துாய்மை திருவிழா நிகழ்வு துவக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி முதல் அக். 2 வரை பல்வேறு துாய்மை செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. துவக்க விழா நிகழ்வில், கல்லுாரி முதல்வர் சுப்பிரமணி தலைமையேற்று மாணவர்களுடன், மலுமிச்சம்பட்டி பகுதியில் துாய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடத்தினார். மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கத் பல்வாந்த் வாகே, திட்ட உதவி அதிகாரி அப்துல் வஹாப், தொகுதி மேம்பாட்டு அலுவலர் சரவணன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கார்த்திக், யோகானந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ