உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய புத்தகம்... புது பாடம்... பள்ளிகள் இன்று திறப்பு

புதிய புத்தகம்... புது பாடம்... பள்ளிகள் இன்று திறப்பு

கோவை, : கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் இன்று (ஜூன் 2) திறக்கப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் தொடங்க உள்ளன.புதிய கல்வியாண்டைத் தொடங்க, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 1ம் வகுப்பு மாணவர்களை வரவேற்க செல்பி பாயின்ட், பலுான்கள், வண்ணக்காகித அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச கல்வி உபகரணங்களான புத்தகங்கள், சீருடை வழங்கத் தயாராக உள்ளன. மேலும், காலை 9.00 மணிக்கு பள்ளிவேளை தொடங்கும் என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை, 15 நிமிடங்களுக்கு முன்னதாக பள்ளியில் விட்டுச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழப்பம் வேண்டாம்

பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், ஒரு சில தனியார் பள்ளிகள் ஜூன் 9ம் தேதி திறக்கப்படுவதாக பெற்றோருக்கு குறுஞ்செய்தி வந்ததால் குழப்பம் ஏற்பட்டது.தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் புனித அந்தோனியம்மாளிடம் கேட்டபோது, ''அரசு தரப்பில் இருந்து, 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. இதையடுத்து, அனைத்து பள்ளி முதல்வர்களையும் அழைத்து, ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகள் 9ம் தேதி திறக்கப்படும் என பரவும் தகவல் பொய்யானது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை