மேலும் செய்திகள்
வாகன விபத்தில் ஒருவர் காயம்
26-Apr-2025
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு சிங்கையன்புதூரில், எம்.எல்.ஏ., தாமோதரன் தொகுதி நிதியில் கட்டப்பட்ட புதிய நிழற்கூரை திறப்பு விழா நடந்தது.கிணத்துக்கடவு, பொட்டையாண்டிபுறம்பு ஊராட்சி, சிங்கையன்புதூர் பகுதியில் நிழற்கூரை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தார்கள். இதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் தொகுதி நிதியில் இருந்து நிழற்கூரை கட்ட, ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.தற்போது, இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, எம்.எல்.ஏ., தாமோதரன் தலைமையில் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில், புதிய நிழற்கூரையை எம்.எல்.ஏ., ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
26-Apr-2025