உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய சோதனை சாவடி துவக்கம்

புதிய சோதனை சாவடி துவக்கம்

கோவை: கோவை எல் அண்ட் டி பைபாஸ் ரோடு கோவை அவிநாசி ரோட்டில் நீலாம்பூரில் இருந்து பாலக்காடு ரோட்டில், மதுக்கரை வரையிலான பைபாஸ் ரோடு, 28 கி.மீ., நீளமுடையது. இந்த ரோட்டில், எட்டிமடை - வாளையார் இடையேயான பகுதியில், சமீபகாலமாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், ஐந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், வழிப்பறியை தடுக்கவும் எட்டிமடை - வாளையார் இடையே புதிதாக சோதனை சாவடி நேற்று துவங்கப்பட்டது.மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் சோதனை சாவடியை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை