மேலும் செய்திகள்
கருட வாகனத்தில் வீதி உலா வந்த கோதண்டராமர்
03-Apr-2025
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், பிளாக் தண்டர் தீம் பார்க் உள்ளது. இங்கு கோடை சீசனை முன்னிட்டு, புதிதாக, 10 நீர் சறுக்கு விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகள்துவங்கப்பட்டுள்ளன.நிர்வாக இயக்குனர் வின்சென்ட் அடைக்கலராஜ் கூறியதாவது:பிளாக் தண்டர் தீம் பார்க் துவங்கி, 27 ஆண்டுகள் ஆகிறது. இங்கு, நீர் சறுக்கு விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகள், திரில் விளையாட்டுகள் என, 60க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன.இந்த ஆண்டு புதிதாக, தண்டர் ஸ்டோர்ம், பாரஸ்ட் அட்வென்ச்சர், பேமிலி ப்ளே ஸ்டேஷன், ப்யுஷன் ஸ்லைடு, கிட்ஸ் மல்டி ரேசர் உள்பட, 10 நீர் சறுக்கு மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குடும்பமாக வரும் வாடிக்கையாளர்களுக்கும், பள்ளி, கல்லுாரியினருக்கும்கட்டணச் சலுகை வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
03-Apr-2025