உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொகுதி வாரியாக புதிய பொறுப்பாளர்கள்!

தொகுதி வாரியாக புதிய பொறுப்பாளர்கள்!

கருமத்தம்பட்டி: ''வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு தொகுதி வாரியாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர்,'' என, தி.மு.க., கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் கருமத்தம்பட்டி அடுத்த ஊஞ்சப்பாளையத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:வரும், நவ., 5 மற்றும் 6ம்தேதி ஆய்வு பணிக்காக கோவை வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, அதிக ஓட்டுகளை, 2026 சட்டசபை தேர்தலில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பெற வேண்டும்.லோக்சபா தேர்தலில், முறையாக தேர்தல் பணி செய்யாத முகவர்கள் மாற்றப்பட்டு, சட்டசபை தொகுதி வாரியாக புதிய தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை பயன்படுத்தி புதிய வாக்காளர்களை இணைக்க வேண்டும். அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி, மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை