மேலும் செய்திகள்
லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
16-Jun-2025
குபேரா - டிரைலர்
16-Jun-2025
கோவை: கோவை மண்டல கட்டட பொறியாளர்கள் சங்கத்தின்(கொஜினா), 2025-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி, காளப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சங்க முன்னாள் செயலாளர் நாகேந்திரகுமார் வரவேற்க, உடனடி முன்னாள் தலைவர் ராஜதுரை தலைமை வகித்தார்.2025-27ம் ஆண்டிற்கான புதிய தலைவராக பழனிச்சாமி, துணை தலைவராக தாமோதரசாமி, செயலாளராக செந்தில்நாதன், பொருளாளராக சுந்தரராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.சிறப்பு விருந்தினர் கொ.ம.தே.க., தலைவர் ஈஸ்வரன் பேசுகையில்,''பொறியாளர்கள் எதிர்கொள்ளும் துயரங்களுக்கு தீர்வுகாணஅரசானது 'இன்ஜினியர்ஸ் பில்' குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.அகில இந்திய கட்டுனர் சங்க உடனடி முன்னாள் தலைவர் விஸ்வநாதன் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். காவேரி குழுமங்களின் ஜே.எம்.டி., வினோத் சிங் ரத்தோர், சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் ஜெயவேல், மக்கள் தொடர்பு அலுவலர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Jun-2025
16-Jun-2025