உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

புதிய பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

சூலுார்: சூலுார்,ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த சதீஷ்குமார், தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் குழந்தைசாமி, ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். காரமடை ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக ( தணிக்கை) இருந்த கணேசமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற்று, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலராக ( வட்டார ஊராட்சி) நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். காரமடை ஒன்றியத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த (100 நாள் வேலை உறுதி திட்டம்)சீனிவாசன், பி.டி.ஓ., வாக பதவி உயர்வு பெற்று, கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை