மேலும் செய்திகள்
வாய்க்கால்மேட்டில் ரேஷன் கடை திறப்பு
15-May-2025
பெ.நா.பாளையம்; துடியலுார் அருகே உள்ள பழனி கவுண்டன் புதுாரில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.துடியலுார் அருகே உள்ள குருடம்பாளையம் ஊராட்சியில் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது. வடமதுரை அருகே பழனிகவுண்டன்புதுாரில் இருந்து அப்பநாயக்கன்பாளையம் செல்லும் வழியில், கூட்டுறவு சங்கம் வாயிலாக இயங்கும் இந்த கடை, அரசு இடத்தில் கட்டப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கடையை கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ரவி திறந்து வைத்து, பொருள்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் கார்த்திக், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
15-May-2025