மேலும் செய்திகள்
பணி ஆய்வாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பு
01-Sep-2025
அன்னுார்; புதிதாக நியமிக்கப்பட்ட பணி ஆய்வாளர்களுக்கு அன்னுாரில் களப் பயிற்சி அளிக்கப்பட்டது. நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 365 பணி ஆய்வாளர்கள் கடந்த மாதம் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் களப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 120 பேர் அடங்கிய குழு நேற்று அன்னுார் வந்தது. அன்னுார் பேரூராட்சியில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பேரூராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு நடக்கும் பணியை கள ஆய்வு செய்தனர். கோவை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எழில், பணி ஆய்வாளர்களிடம் கூறுகையில், ''அஸ்திவாரம் முதல் முடியும் வரை மிகுந்த கவனமுடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும். கட்டுமான பணியில் சிறிது அலட்சியமாக இருந்தாலும் பாதிப்பு ஏற்பட்டு விடும், என்றார். இதில், மாநகராட்சி உதவி பொறியாளர் ஹரி பிரசாத், பேரூராட்சி சுகாதார அலுவலர் ராஜ்குமார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
01-Sep-2025