உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை அமைக்க நிதி இல்லை; ஊராட்சி நிர்வாகம் கைவிரிப்பு

சாலை அமைக்க நிதி இல்லை; ஊராட்சி நிர்வாகம் கைவிரிப்பு

அன்னுார் : அன்னுாரில் இருந்து ஒட்டர் பாளையம் செல்லும் பாதை மிக மோசமாக உள்ளதால் தினமும் விபத்து ஏற்படுகிறது. அன்னுார் மேட்டுப்பாளையம் சாலை யில், ஜீவா நகரில் இருந்து ஒட்டர்பாளையம், அழகாபுரி நகர், ஸ்ரீநகர், ஆயிகவுண்டன் புதுார், பூலுவபாளையம் வழியாக சிறுமுகை சாலை வரை, தனியார் மெட்ரிக் பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்த வழித்தடத்தில் ரோடு போட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பல இடங்களில், தார் ரோடு கரைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, அரை அடி வரை குழி ஆழமாக ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஆயிக் கவுண்டன் புதுார் மக்கள் கூறுகையில், 'இதில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருவோர், தினமும் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை ஒட்டர் பாளையம் ஊராட்சி அலுவலகத்திலும், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் சாலை அமைக்கப்படவில்லை.'நிதி இல்லை' என்று ஊராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம், விபத்துக்களை தவிர்க்க, நிதி ஒதுக்கி, அன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து, பூலுவ பாளையம் வரை புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி